ஆஹா.. இந்த செய்தி உண்மைதானா.. எங்களை ஏமாற்றவில்லையே என ரசிகர்களின் கண்களிலேயே ஒரு சந்தோஷ ஏக்கம் தெரிவது நிச்சயம்.. ஒருவகையில் இது உண்மைதான்.. அது என்ன ஒரு வகையில்..? ஆமாங்க.. பாலா இயக்கும் படத்தில் அல்ல, பாலா தயாரிக்கும் படத்தில் தான் விஜய்சேதுபதி நடிக்கிறார்.
தற்போது சசிகுமார், வரலட்சுமியை வைத்து தனது படத்தை இயக்கும் பாலா, தனது பி’ ஸ்டுடியோ நிறுவனம் மூலம் இந்தப்படத்தை தயாரிக்கிறார். இந்தப்படத்தில் தான் விஜய்சேதுபதி நடிக்கிறார். காதல் கலந்த குடும்பச்சித்திரமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தின் பெயர் ‘வசந்த குமாரன்’. விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க இருக்கிறார் வரலட்சுமி..
‘செமரகளை’, ‘எதிரி எண் 3’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் குமரேசன் இந்தப்படத்தை இயக்குகிறார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகர் தான் இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார்.