விஜய்சேதுபதி ஜோடியானார் பிந்துமாதவி..!

விஜய் சேதுபதியின் புதிய படத்தை இயக்குகிறார் வெற்றிமாறனிடம் உதவியக்குனராக பணியாற்றிய ஆனந்த் குமரேசன். படத்தின் பெயர் ‘வசந்தகுமாரன்’. வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் பிந்துமாதவி ஜாடிக்கேத்த மூடியாக இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஸ்டுடியோ-9 சார்பாக சுரேஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜஸ்டின் பிரபாகர். இவர்தான் ‘பண்ணையாரும் பத்மினி’யும் படத்திற்கு இசையமைத்தவர். ‘பசங்க’ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ‘சுந்தர பாண்டியன்’ ‘ரம்மி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். வரும் ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.