‘றெக்க’ விரிக்க தயாராகும் விஜய்சேதுபதி..!

rekka

ஒருபக்கம் சீரான இடைவ்வேலியில் படங்களை ரிலீஸ் செய்துகொண்டே இருக்கும் விஜய்சேதுபதி, இன்னொரு பக்கம் அதற்கேற்ற மாதிரி வரிசையாக புதிய படங்களில் நடிக்கவும் ஒப்புக்கொண்டு வருகிறார்.. இப்போதே இவர் கைவசம் ‘மெல்லிசை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன..

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார்.. இன்னொரு பக்கம் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே அவர் நடிக்க இருக்கும் புதிய படம் தான் ‘றெக்க’.. இன்னும் வெளிவராத ‘வா டீல்’ பட இயக்குனரான இரத்தின சிவா இயக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதியுடன் புதிய கலர்புல் ஜோடியாக சேர்ந்துள்ளார் லட்சுமி மேனன்.

‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை தயாரித்த, விஜய்சேதுபதியின் நண்பர் கணேஷ் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு போட்டோஷூட்டுடன் துவங்கியுள்ளது.