ஹாட்ரிக் தான்.. ஆனால் ஜோடிதான் மாறிப்போச்சு..!

தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கிவருகிறார் தேசியவிருது பெற்ற பட இயக்குனரான சீனு ராமசாமி. இந்தப்படத்தில் சீனு இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ பட ஹீரோவான விஜய் சேதுபதியும் அடுத்து அவர் இயக்கிய ‘நீர்ப்பறவை’ படத்தின் ஹீரோவான விஷ்ணுவும் இணைந்து நடிப்பதன் மூலம் தங்களது குருபக்தியைத்தான் காட்டி வருகிறார்கள்.

இந்தப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘அட்டகத்தி’ நந்திதாவும் விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘ரம்மி’ ஐஸ்வர்யாவும் (இன்னும் கொஞ்சம் நாளைக்கு அடைமொழியோட தான் பெயர் போடுவோம்) நடிக்கிறார்கள். ஆனால் ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த ஐஸ்வர்யா இதில் ஹாட்ரிக் அடித்தாலும் விஷ்ணுவுக்கு ஜோடியாக மாறிவிட்டார். அதேபோல நந்திதாவுக்கும் இது விஜய்சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கும் இரண்டாவது படம்.

இந்தப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்சேதுபதி, நந்திதா சம்பந்தப்பட்ட காட்சிகளை முதல்கட்ட படப்பிடிப்பாக கொடைக்கானலில் படமாக்கினார்கள். அடுத்ததாக விஷ்ணு, ஐஸ்வர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை மதுரை பின்னணியில் படமாக்க இருக்கிறார்களாம்.