சத்தம் இல்லாமல் வளர்ந்த விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’

ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களில் இணைந்து கலக்கிய விஜய் சேதுபதி இயக்குனர் அருண்குமார் கூட்டணி தற்போது மூன்றாவதாக சிந்துபாத் என்கிற படத்தில் இணைந்து உள்ளது விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது

இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார் இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்த படத்தை ராஜராஜன் மற்றும் சுதர்சன் ஆகியோர் தயாரிக்கின்றனர் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது