இயக்குனர் மு.களஞ்சியத்துக்கு விஜய்சேதுபதி பாராட்டு..!

mu.kalanchiyam
கடந்த வாரம் வெளியான ‘கோடை மழை’ படம் கொஞ்சம் கொஞ்சமாக மவுத் டாக்கால் பிக்கப்பாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப்படத்தில் இயக்குனர் மு.களஞ்சியம் வெள்ளத்துரை என்கிற கதாபாத்திரத்தில், நடிகை பிரியாங்காவின் அண்ணனாக நடித்திருக்கிறார்.. இல்லையில்லை வாழ்ந்திருக்கிறார் எருதான் சொல்லவேண்டும்…

கம்பீரமான தோற்றமும், முறைப்பான நடை, உடை, பாவனையும் வெள்ளத்துரை கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. கோடைமழை படத்தை பிரத்தியேகமாக பார்த்த நடிகர் விஜய்சேதுபதி ‘’தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகச்சிறந்த நடிகன் கிடைத்துள்ளார், இயக்குனர் மு,களஞ்சியத்திற்கு போலிஸ் கெட்-அப் சரியாக பொருந்தி இருக்கிறது, திருநெல்வேலி மாவட்டத்துக்காரனாவே மாறி வாழ்ந்திருக்கிறார்’’ என்று மனம் விட்டு பாராட்டியுள்ளார்.

இயக்குனர் மு.களஞ்சியம் பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும், நிலவே முகம்காட்டு, மிட்டாமிராசு, கருங்காலி போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். கருங்காலி படத்தில் நடிகை அஞ்சலியோடு இணைந்து எதிர் கதாநாயகனாக நடித்திருந்தார்.. கோடை மழை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புது முகங்கள் நடிக்கிற ‘முந்திரிக்காடு’ என்கிற, படத்தை தயாரித்து இயக்கி வருகிறார்.