“பிரச்சனைகள் வந்தால் அடுத்த கட்டத்திற்கு போகப்போகிறேன் என அர்த்தம்” – விஜய்சேதுபதி

96 (1)

கடந்த வாரம் விஜய்சேதுபதி-த்ரிஷா நடிப்பில் ‘96’ படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்துள்ள இருந்த இந்த படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார் பிரேம்குமார். இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பட ரிலீஸ் குறித்த பிரச்சனை பற்றியும் விஜய்சேதுபதி பேசினார்.

இது பற்றி விஜய்சேதுபதி பேசுகையில், “இங்கு திரையுலகில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக யாரும் யார் மீது குறை சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் குறி வைத்து செய்யும் தவறு. இது உருவாக்கப்பட்டது. இது எல்லாம் ஒரு வட்டத்தைப் போன்றது. வட்டத்தில் எது தொடக்கம்? எது இறுதி? என்று கண்டுபிடிப்பது கஷ்டமோ, அதேப் போல் இது போன்ற பிரச்சினைகளின் தொடக்கம் எது என்று கண்டுபிடிப்பதும் கஷ்டம். அதற்காக இவ்விசயம் தொடர்பாக யார் மீது பழி சுமத்த விரும்பவில்லை.

யாரும் இதற்கு பொறுப்பும் அல்ல. இதனை காப்பாற்ற முயற்சி செய்த லலித்குமார் முக்கியமான ஆள். தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். வலித்தது. ஆனால் சில சமயத்தில் வேறு வழியில்லை. ஏனெனில் இதெல்லாம் ஒரு குடும்பம்.

வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போது நான் அடுத்தக்கட்டத்திற்கு போகப் போகிறேன். யார் மீது யார் எவ்வளவு பாரம் வைக்கப்போகிறார்களோ, யார் எவ்வளவு பாரம் தாங்குவார்களோ அவர்கள் தான் இன்னும் மேலே உயர முடியும். என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி பல சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். இது என்னமோ என்னுடைய படக்குழுவினருக்கு மட்டும் நடந்த விசயமில்லை. காலங்காலமாக நடைபெற்று வந்துக்கொண்டிருக்கிறது.’ என்றார்.