‘போலீஸ் ஸ்டோரி’ செண்டிமெண்ட் அருண்குமாருக்கு ஒர்க் வுட் ஆகுமா..?

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார் அடுத்ததாக விஜய்சேதுபதியை வைத்து இயக்கும் படம் தான் ‘சேதுபதி’. விஜயகாந்த் டைட்டிலை பிடித்தது போல, அவரைப்போலவே அதிரடி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் விஜய் சேதுபதி.. இது ஒருபக்கம் இருக்க, முதல் படம் சரியாக போகாத நிலையில் அடுத்ததாக போலீஸ் ஸ்டோரியை அருண்குமார் எடுத்துள்ளது எந்தவகையில் அவருக்கு ஒர்க் அவுட் ஆவும் என ஒரு ஆருடம் பார்க்கலாமா..?

ஏற்கனவே இதே ரூட்டில் அதாவது முதல் படம் ஆவரேஜ் அல்லது சரியாக போகாமல் இருந்தது அல்லது சூப்பர்ஹிட் என எப்படி இருந்தாலும் தங்களது இரண்டாவது படமாக போலீஸ் கதையை கையில் எடுத்தவர்கள் சூப்பர்ஹிட் அடிக்கவே செய்திருக்கிறார்கள். தனது முதல் படமான ‘தமிழ்’ படத்தை தொடர்ந்து ‘சாமி’யை இயக்கிய ஹரி, ‘மின்னலே’ படத்தை தொடர்ந்து ‘காக்க காக்க’ படத்தை கொடுத்த கௌதம் மேனன், ‘எதிரும் புதிரும்’ படத்தை தொடர்ந்து ‘தில்’ கொடுத்த தரணி என இதற்கு முந்தைய போலீஸ் ஸ்டோரி வரலாறுகளை பார்க்கும்போது அருண்குமாருக்கும் இந்த சேதுபதி கைகொடுக்கும் என்றே தெரிகிறது.