ரஜினியுடன் இணைந்தார் விஜய்சேதுபதி

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வந்த போது பலரும் கேட்ட ஒரு கேள்வி, இந்தப்படத்தில் விஜய்சேதுபதியும் நடிக்கிறாரா என்பதுதான். காரணம் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் படங்களில் பிரதான இடம் பிடித்து வரும் விஜய்சேதுபதி இந்தப்படத்திலும் நிச்சயம் நடிப்பார் என்று ஆருடம் சொல்லப்பட்டது..,

வெறும் வாய்ப்பேச்சாக, யூகமாக இருந்த செய்தி இப்போது உண்மையாகிவிட்டது.. இதோ ரஜினியுடன் விஜய்சேதுபதியும் இணைந்து நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறிப்பாக இதில் அவர் வில்லனாக நடிப்பார் என்றும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் கூறிவருகிறார்கள். இந்த வாய்ப்பு விஜய்சேதுபதியின் திரையுலக பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.