விஜய்சேதுபதியின் போலீஸ் அவதாரம் ; சாமியா..? சத்ரியனா..?

vijay sethupathi police avatar
விஜய்சேதுபதி முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் என்பதாலேயே வழக்கமான அவரது படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இப்போது ‘சேதுபதி’ படத்திற்கு இருமடங்காக மாறியுள்ளது. அருண்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக, விஜய்சேதுபதியின் மனைவியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹவா ஹவா’ என்கிற பாடல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.

‘சேரன் பாண்டியன்’ படத்தில் செந்தில் பொய்யாக தூக்குப்போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டே ‘ஹவா ஹாவா’ என பாடுவாரே, அந்த காட்சியுடன் இந்தப்பாடல் துவங்குகிறது.. இந்தப்பாடல் காட்சியில் விஜய்சேதுபதி தனது மனைவியுடனும் குழந்தைகளுடனும் காட்டும் அன்யோன்யத்தை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்..

ஏற்கனவே வெளியான படத்தின் புகைப்படங்களில் முறுக்கு மீசையும் விறைப்புமாக காட்சி தருகிறார் விஜய்சேதுபதி.. இப்போது பாடல் காட்சிகளிலோ குடும்பத்தலைவனாக டோட்டலாக மாறியிருக்கிறார்.. அதனால் இந்தப்படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் ‘சத்ரியன்’ விஜயகாந்த் பாணியில் பேமிலி சென்டிமென்ட் கலந்ததாக இருக்குமா..? அல்லது சாமி’ விக்ரம் போல நான்ஸ்டாப் அதிரடியாக இருக்குமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.