எம்.ஜி.ஆர்-ரஜினி படங்களை தயாரித்த நிறுவனத்தில் விஜய்சேதுபதி படம்

விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை இயக்கியவர் விஜய்சந்தர்.. இவர் அடுத்ததாக விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். எங்க வீட்டு பிள்ளை, உழைப்பாளி, நம்மவர், தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான “விஜயா புரொடக்க்ஷன்ஸ்” இந்தப்படத்தை தயாரிக்கிறது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தின் மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.