‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி-ரித்திகா சிங்..!

aandavan kattalai
‘காக்கமுட்டை’ என்கிற சென்சேஷனல் ஹிட் படத்தை கொடுத்து கடந்த வருடம் முழுதும் அந்தப்படத்தை பற்றியே அனைவரையும் பேசவைத்தவர் இயக்குனர் மணிகண்டன்.. அடுத்ததாக தற்போது ‘ஆண்டவன் கட்டளை’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். ஆம்.. நடிகர் திலகம் சிவாஜி நடித்த படத்தின் டைட்டில் தான்.

விரைவில் துவங்கப்படவுள்ள இந்தப்படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க அவருக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த துறுதுறு பெண்ணான ரித்திகா சிங் நடிக்கிறார். பாக்ஸராக இருந்ததால் நடிக்க அழைத்து வரப்பட்ட ரித்திகா சிங், இனிமேல் நடிகையாகத்தான் தொடரப்போகிறேன் என கூறியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.