இந்தியாவிலேயே முதன்முறையாக விஜய்சேதுபதிக்குத்தான் இந்த பெருமை..!

seethakathi

‘நடுவுல கொஞ்சம்பக்கத்த காணோம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சீதக்காதி’. இந்த படத்தில் மூத்த நாடகக்கலைஞர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். சீதக்காதி படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, தேசிய விருது வென்ற நடிகை அர்ச்சனா உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதில், விஜய் சேதுபதி 80 வயது முதியவர் தோற்றத்தில் அய்யா ஆதிமூலம் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். சீதக்காதி படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, தேசிய விருது வென்ற நடிகை அர்ச்சனா உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் சீதக்காதி படத்தில் விஜய்சேதுபதி ஏற்றுள்ள அய்யா கதாபாத்திரன் மெழுகுச்சிலை திறக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மகேந்திரம்ன் இந்த சிலையை திறந்துவைத்துள்ளார்.

மேலும் இந்த சிலையுடன் செல்பி எடுத்து அதில் குறிப்பிட்டுள்ளபடி முகநூல் பக்கத்தில் பகிர்ந்தால், அதில் வெற்றிபெறும் ரசிகர்களுக்கு ‘சீதக்காதி’ படத்தின் பிரிமியர் ஷோவை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.