“விஜய்யும் ரஜினியும் சேர்ந்து ஸ்ரீதரை ஜெயிக்கவைப்பார்கள்” – கலைப்புலி தாணு வாழ்த்து


டான்ஸ் மாஸ்டராக இருந்த ஸ்ரீதர், இப்போது ‘போக்கிரி மன்னன்’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் புரமோஷன் ஆகிவிட்டார்.. இந்தப்படத்தை ராகவ் மாதேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்திரவர்மன் என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை கமலா தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டு பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “ நான் தயாரித்த வி.ஐ.பி படத்தில் நடித்தபோது சீக்கிரம் டைரக்ஷன் பண்ணு பிரபு என பிரபுதேவாவிடம் சொன்னேன்.. அவர் இன்று பெரிய டைரக்டராகிவிட்டார். அதேபோலத்தான் இப்போது ஹீரோவாகி இருக்கும் ஸ்ரீதரிடமும் சீக்கிரம் ஒரு படத்தை இயக்குங்கள் என கூறியுள்ளேன்.. அதுவும் நடக்கத்தான் போகிறது..

விஜய் நடித்து சூப்பர்ஹிட்டான போக்கிரியும் ரஜினி நடித்து சூப்பர்ஹிட்டான மன்னனும் இந்தப்படத்தின் டைட்டிலில் சேர்ந்திருப்பதால் இந்த ‘போக்கிரி மன்னன்’ படமும் அவற்றை போலவே மாபெரும் வெற்றிபெறும் என்பது உறுதி” என பாராட்டினார் தாணு..  விழாவில் இயக்குனர் ராஜ்கபூர், நடிகர்கள் சாந்தனு, கருணாஸ், ஸ்ரீமன், ‘மேகா’ அஸ்வின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.