விஜய் படம் ஜூன்-27ல் வெளியீடு..!

தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி மீண்டும் தெவத்திருமகள் போல இயக்குனர் ஏ.எல்.விஜய் உணர்வுப்பூர்வமாக இயக்கியுள்ள படம் தான் ‘சைவம்’. மிகப்பெரிய நடிகர், நடிகைகள் யாரும் இன்றி ‘தெய்வத்திருமகள்’ சாராவையும் தனது கதையையும் மட்டுமே நம்பி, களம் இறங்கியுள்ளார் விஜய். சாராவின் தாத்தாவாக நாசர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப்படத்திற்கு தனது உணர்வுப்பூர்வமான இசையால் மெருகூட்டியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ். விஜய்-அமலாபால் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நிலையில் அவர்களுக்கு மிகச்சிறந்த பரிசாக ‘சைவம்’ இருக்கும். இந்தப்படம் வரும் ஜூன் -27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப்படத்தை வெளியிடுகிறது.