விஜய்க்கு பண்ணின மாதிரி அட்லீக்கும் பண்ணுவாங்களோ..?

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் அட்லீ டைரக்சனில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் மிகப்பிரமாண்டமாக மெர்சல் படத்தின் ஆடியோ ரிலீஸை நடத்தி முடித்தார்கள். .

இந்தநிலையில் அடுத்ததாக சில தினங்களில் இந்தப்படத்தின் டீசரை வெளியிட இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. வரும் செப்-21ல் அட்லீயின் பிறந்தநாள் வருகிறது என்பதால் அன்றைய தினம் ‘மெர்சல்’ டீசரை ரிலீஸ் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.