கோடியில் ஒருவனாக மாறும் விஜய் ஆண்டனி


கடந்த 2௦19ல் வெளியான கொலைகாரன் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் தமிழரசன், காக்கி, அக்னி சிறகுகள், பிச்சைக்காரன்-2 என தொடர்ந்து அவரது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.. இந்தநிலையில் ‘கோடியில் ஒருவன்’ என்கிற புதிய படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி.

கதாநாயகியாக ஆத்மிகா நடிக்கிறார். இந்தப்படத்தை ஆனந்த் கிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார். இவர் விதார்த் நடித்த ஆள் மற்றும் பாபி சிம்ஹா நடித்த மெட்ரோ ஆகிய படங்களை இயக்கியவர். நிவாஸ் கே.பிரசன்னா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். தெலுங்கில் இந்தப்படத்திற்கு விஜயராகவன் என பெயரிட்டுள்ளார்கள்.