‘பூ’ சசியால் ‘பிச்சைக்காரன்’ ஆகிறார் விஜய் ஆண்டனி..!

முதல் இரண்டு படங்களின் மூலம் ஒரு நடிகனாக தன் மீது ஒரு எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தற்போது இந்தியா-பாகிஸ்தான் என்கிற படத்தில் முனைப்புடன் நடித்து வருகிறார். பெயர்தான் மிரட்டலான ரானுவப்படம் மாதிரி தெரிகிறதே தவிர முழுக்க முழுக்க காமெடி படமாகத்தான் இது உருவாகியுள்ளதாம். விஜய் ஆண்டனியின் சீரியஸ் இமேஜை இந்தப்படம் மாற்றும் என்கிறார்கள்..

இதை முடித்துவிட்டு அடுத்ததாக ‘பூ’, ‘555’ படங்களை இயக்கிய சசியின் இயக்கத்தில் ‘பிச்சைக்காரன்’ என்கிற படத்தில் நடிக்கிறார் விஜய் ஆன்டணி.. இது காமெடி, ஆக்சன் இரண்டிலிருந்தும் மாறுபட்ட கதையாக இருக்குமாம். இன்னொரு பக்கம் சலீமின் மூன்றாம் பாகத்திற்கான டிஸ்கஷனும் ஓடிக்கொண்டு இருக்கிறதாம்.