‘பாகுபலி-2’வின் 5 தவறுகள் ; விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி..!

Vignesh-Shivan about bahubali
சமீபத்தில் வெளியான ‘பாகுபலி-2’ படம் ரசிகர்களை மட்டுமல்ல சினிமா படைப்பாளிகள் பலரையும் மிரள வைத்துள்ளது. அந்தப்பட்டியலில் ‘நானும் ரவுடி தான் ‘ இயக்குனர் விக்னேஷ் சிவன் மட்டும் விதிவிலக்கா என்ன..? படம் பார்த்த விக்னேஷ் சிவன், அந்தப்படம் கொடுத்த சந்தோஷத்தை தாங்க முடியாமல், ‘பாகுபலி-2’வின் 5 தவறுகள் என என தனது எண்ணத்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

1. இவ்வளவு பெரிய பிரமாண்டத்திற்கு வெறும் 120 ரூபாய் தான் செலுத்துவதா..? படம் முடிந்து வரும்போது இன்னும் கொஞ்சம் அதிகமாக பணம் போட ஒரு கலெக்சன் பாக்ஸோ அல்லது தயாரிப்பாளரின் அக்கவுண்ட் நம்பரோ கொடுத்திருக்கலாம்.

2. படத்தின் நீளம் ரொம்பவே குறைவு.. எந்த ஒரு ரசிகனும் 3 மணி நேரத்திற்குள்ளாக மட்டுமே இந்தப்படம் முடிந்துவிடுவதை விரும்ப மாட்டான்.

3. அளவுக்கு அதிகமான டீடெய்ல்களும் படமாக்கிய நேர்த்தியும் இங்கே பல இயக்குனர்களின் தன்னம்பிக்கையை, தலைக்கனத்தை அடித்தி துவைத்திருக்கிறது.

4. இந்த இரண்டாம் பாகம் கன்க்ளூசன் என முடிந்திருக்க கூடது.. இன்க்லூசன் ஆக இன்னும் பத்து பாகங்களுக்கு, வரும் காலங்களில் நாங்கள் இன்னும் பார்த்து, திகைக்கும் விதமாக அந்த அனுபவம் தொடர்ந்திருக்க வேண்டும்.

5. இனிதான் நமக்கு சோதனையான நேரம் காத்திருக்கிறது.. இந்தப்படத்தைப்போல ஒரு பெஞ்ச் மார்க்கை உருவாக்க, இந்தப்படம் உருவாக்கியுள்ள ரெக்கார்டுகளை முறியடிக்க இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ யாருக்கு தெரியும்..?