“எனக்கு கிடைத்த ஆஸ்கர் விருது” ; பரவசத்தில் விக்னேஷ் சிவன்..!

vignesh sivan - rajini 1

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுக்கொண்டிருக்க, தங்களது கனவு விருதான அந்த விருது வழங்கும் விழாவை திரையுலகில் உள்ள பலரும் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால் விக்னேஷ் சிவனுக்கு திடீரென வந்த அழைப்பும், அதை தொடர்ந்து நிகழ்ந்த சந்திப்பும் ஆஸ்கர் விருது வாங்கிய சந்தோஷத்தை தந்துவிட்டது..

ஆமம். சூப்பர்ஸ்டார் ரஜினியை அன்றைய தினம் சந்தித்து வந்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.. இது எதிர்பாராத சந்திப்பு என்பதால் பரவசமாகிப்போன விக்னேஷ் சிவன், “ஆஸ்கர் விருது விழா நாளில் இறைவன் எனக்கு கொடுத்த ஆஸ்கர் விருது இதுதான்.. தெய்வீக சக்தி.. வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே அமையும் தருணம்..” என ரஜினியுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கூறியுள்ளார்.