விதார்த்தின் பட வாய்ப்புகளை அதிகப்படுத்திய ‘குரங்கு பொம்மை’..!

Kurangu Bommai Press meet 2

பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் குரங்கு பொம்மை.இதில் இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் நாயகியாக டெல்னா டேவிஸ் என்கிற புதுமுகம் அறிமுகம் ஆகிறார் இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கதாநாயகன் விதார்த், பாரதிராஜா பற்றி பேசினார்.

“இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் எனக்கு நிறைய காம்பினேஷன் காட்சிகள் இல்லை. ஆனால், அவரது காட்சிகள் படப்பிடிப்புக்கு நடக்கும்போது அருகில் இருந்து கவனிப்பேன். மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் நிச்சயமாக இந்த படத்தில் சிறந்த நடிப்பிற்காக தேசியவிருது நிச்சயம் வாங்குவார்.

மேலும் விதார்த் பேசுகையில், இந்த படம் மிக சிறப்பான படம். நித்திலன் மிக திறமையான இயக்குநர். இந்த படத்தில் நான் நடித்திருப்பதால் எனக்கு நான்கு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதோடு, நான் இப்போது இயக்குநர் இமயம் இயக்கும் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஏன் இதைச்சொல்கிறேன் என்றால், இது எல்லாம் அமைய நித்திலனும் குரங்கு பொம்மையும் தான் காரணம்” என கூறினார்.