வெனிஸ் திரைப்பட விழாவில் வேட்டி கட்டிய வெற்றிமாறன்..!

‘காக்கா முட்டை’, ‘குற்றம் கடிதல்’ போன்ற படங்கள் நிறைய திரைப்பட விழாக்களில் கலந்து பரிசுகளை அள்ளியதோடு, உலகத்தாரின் கவனத்தையும் கவர்ந்திருக்கின்றன. ஆனால் இப்போது வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விசாரணை’க்கு கிடைத்துள்ள கெளரவம் அலாதியானது. காரணம் 72 வருட தமிழ்சினிமா வரலாற்றில் போட்டிப்பிரிவில் கலந்துகொண்டு திரையிட தேர்வாகியுள்ள ஒரே படம் ‘விசாரணை’ தான்.

அதிலும் போட்டியில் கலந்துகொண்ட கிட்டத்தட்ட 2500 படங்களில் சலித்து சல்லடை செய்யப்பட்டு, திரையிட தேர்வான சில படங்களில் தான் ‘விசாரணை’யும் இடம்பிடித்தது. இப்போது வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் என்கிற பெருமையையும் ‘விசாரணை’ படம் பெற்றுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்ள இயக்குனர் வெற்றிமாறன், சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ் ஆகியோர் வேட்டி கட்டியபடி கலந்துகொண்டு நம் தமிழனின் பெருமையை நிலைநாட்டியுள்ளார்கள்.. ‘கத்தி’ படத்தை தயாரித்த ‘லைக்கா’ நிறுவனம் இந்த படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது.