ஜாம்பவான்கள் முன்னிலையில் வெற்றிமாறனுக்கு பாராட்டுவிழா நடத்திய மிஷ்கின்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விசாரணை’ படத்திற்கு சினிமாவை தீவிரமாக நேசிக்கும் இயக்குனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் வெற்றிமாறனை பாராட்டி வருகிறார்கள்.. இதில் இயக்குனர் மிஷ்கின் ஒருபடி மேலே போய் தனது அலுவலகத்தின் மாடியில் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்து அதற்கு மணிரத்னம்,ஷங்கர்,பாலா,ராம், சசி, K V ஆனந்த், பா ரஞ்சித், சமுத்திரகனி போன்ற ஜாம்பவான்களை வரவழைத்து வெற்றிமாறனை வாழ்த்தி மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

வெற்றிமாறன் பற்றி மிஷ்கின் பேசும்போது, “இதுவரை ஆஸ்கார் விருதுக்கு செல்லும் நம் படங்கள் அங்கே வெறுமனே கதவை மட்டும் தட்டிக்கொண்டு இருந்தனர். இதோ ‘விசாரணை’ மூலமாக அந்த கதவிற்கு வெடிகுண்டே வைத்துவிட்டார் வெற்றிமாறன்” என பாராட்ட இவ்வளவு தடபுடலான ஏற்பாடுகளையும் பாராட்டுக்களையும் எதிர்பாராத வெற்றிமாறன் நெகிழ்ந்துவிட்டாராம்.