“என்ன நடந்ததென்றே தெரியவில்லை” – வெற்றிமாறன் நெகிழ்ச்சி..!

 

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விசாரணை’ படம் 72வது வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ‘மனித உரிமைகள் பற்றிய சினிமா’ என்கிற பிரிவில் விருது பெற்றுள்ளது. இந்தப் படம் அங்கே திரையிடப்பட்டபோது விமர்சகர்களிடமும் பார்வையாளர்களிடமும் ஒரே மாதிரியான வரவேற்பை பெற்றுள்ளது என்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

அங்கே ‘விசாரணை’ படம் திரையிடப்பட்டு காட்சி முடிவடைந்ததும் அதன்பின் எழுந்த கைதட்டலும் ஆரவாரமும் அடங்குவதற்கு கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் ஆயிற்றாம்.. வெற்றிமாறனுக்கோ முதலில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லையாம்.. இத்தனை வரவேற்பை பார்த்ததும் வெற்றிமாறன், சமுத்திரக்கனி உட்பட இந்த விழாவில் கலந்துகொண்ட நம்மவர்களின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்ததாம்.