ஜி.வி.பிரகாஷின் புதிய படத்தில் வெற்றிமாறன் – அட்லீ கூட்டணி..!

நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் முதல் படமாக ‘டார்லிங்’கை ரிலீஸ் செய்து வெற்றி கண்டுவிட்டார். அடுத்து ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ படத்தின் இசைவெளியீட்டை முடித்து ரிலீஸுக்கு அருகில் வந்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் முதலில் நடிகராக அரிதாரம் பூசிய ‘பென்சில்’ படமும் இவரது கையிருப்பில் உண்டு.

இதற்கு அடுத்ததாக நான்காவதாக  இவர் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குனர்கள் இருவர் இணைந்து ஜி.வி.பிரகாஷை பட்டை தீட்ட வருகின்றனர். ஆம் ஜி.வி.பிரகாஷின் நண்பர் ஷங்கர் இயக்கவிருக்கும் அந்தப்படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை எழுத, அட்லீ வசனம் எழுதுகிறார்.. இந்த இரண்டு இயக்குனர்களின் படங்களின் வெற்றியிலும் ஜி.வி.பிரகாஷின் இசைக்கு முக்கிய பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.