பிஜாய் நம்பியாரையும் துல்கரையும் வருத்தப்பட வைத்த ‘சோலோ’..!

solo 1

துல்கர் சல்மான் நடிப்பில் ‘தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவான சோலோ’ படம், வரி பிரச்சனை தீரும்வரை தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என அறிவித்ததால் கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் மட்டும் வெளியாகியுள்ளது. தற்போது இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் வேறுவிதமாக மாற்றப்பட்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் இது இயக்குனர் பிஜாய் நம்பியாரின் அனுமதி இல்லாமலேயே மாற்றப்பட்டு இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

நான்கு குறும்படங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தின் முடிவு ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை என்றும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருவதாக இருப்பதாகவும் சோஷியல் மீடியாவில் பலரும் கருத்துக்களை கூறினார். இதனால் இயக்குனரின் அனுமதி இல்லாமலேயே தயாரிப்பு நிறுவனம் க்ளைமாக்சில் சில மாற்றங்களை செய்து தியேட்டர்களுக்கு அனுப்பியுள்ளது.

இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பது குறித்து இயக்குனர் பிஜாய் நம்பியாரும், நாயகன் துல்கர் சல்மானும் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள். இன்னும் ஒருபடி மேலேபோய், “தயவுசெய்து சோலோ படத்தை கொல்லாதீர்கள்” என துல்கர் சல்மான் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.