‘மாஸ்’ கதை இதுவல்ல– மறுக்கிறார் வெங்கட்பிரபு

தீபாவளிக்கு கத்தி, பூஜை ஆகியவை ஒரு பக்கம் வெளியாக, இன்னொரு பக்கம் சூர்யாவின் ‘மாஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இந்தப்படங்களுக்கு இணையான வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் பிளாக் அன்ட் ஒயிட்டில் சூர்யாவின் முகமே டெரர் காட்டுகிறது.

‘ஐ’ பட ட்ரெய்லர் வெளியானபோதே அதை வைத்து ஆயிரம் கதைகள் இணையதளத்தில் உலாவந்தன. இப்போது மாஸ் படத்தின் போஸ்டரை வைத்து இணையதளத்தில் பல கதைகள் உலா வர ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் பொதுவாக தன் படங்களை பற்றி வெளியாகும் யூக கதைகளை கண்டும் காணாததுபோல விட்டுவிடும் வெங்கட் பிரபு ஆச்சர்யமாக அவற்றை எல்லாம் மறுத்துவருகிறார்.

‘அஞ்சான்’ படம் வெளியாவதற்கு முன்னரே ஆரம்பித்த ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இப்போது முழு மூச்சாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சில முக்கியமான காட்சிகளை படமாக்குவதற்காக பல்கேரியா சென்று வந்திருக்கிறது ‘மாஸ்’ படக்குழு.