தொடர்கிறது வெங்கட்பிரபுவோட ‘தூக்கிட்டு வாங்கடா’ பிளான்…!


வெங்கட் பிரபு தனது படங்களுக்கான கதைக்களத்திற்காக மட்டுமல்ல.. அதில் நடிக்கும் முக்கியமான கேரக்டர்களை தேர்வு செய்வதிலும் அசகாய சூரர். அந்த வகையில் ஹீரோக்களை தவிர படத்தில் நடிக்கும் வில்லன் கதாபாத்திரத்திற்கோ அல்லது வில்லன் மாதிரி தோன்றி குணச்சித்திரமாக மாறும் கதாபாத்திரத்திற்கோ இவர் ஆட்களை தேர்வு செய்யும் பாணியே தனி.

‘சரோஜா’வில் வில்லனாக ஜெயராம், மங்காத்தாவில் அர்ஜூன், பிரியாணியில் ராம்கி என ரிட்டையர்டு ஆன, ஆகப்போகும் முன்னாள் ஹீரோக்களை ‘போய் தூக்கிட்டு வாங்கடா’ என ஆள் அனுப்பாத குறையாக தேடிப்போய் அழைத்து வந்து தனது படங்களில் நடிக்கவைத்து ‘ஹைப்’ கிரியேட் பண்ணுவதில் வல்லவர்.

அந்தபாணியில் தான் தற்போது சூர்யாவை வைத்து அவர் இயக்கிவரும் புதிய படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க ஏற்கனவே திரையுலகில் இருந்து வி.ஆர்.எஸ் வாங்கி அக்கடா என ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் ‘மைக்’ புகழ் மோகனை தேர்வு செய்திருக்கிறாராம். நீங்க கூப்புடுறீங்க பாஸ்.. அதுல அவங்க அலர்ட் ஆகி செகண்ட் இன்னிங்ஸை பிக்கப் பண்ணிக்கிட்டா சரிதான்.