செப்-29ல் ‘வேலைக்காரன்’ ரிலீஸ்..!

VELAIKKARAN

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா என ஆச்சர்யப்படவைக்கும் ஜோடி இணைந்து நடித்துள்ள படம் தான் ‘வேலைக்காரன்’.. மலையாள நடிகர் பஹத் பாசில் மற்றும் சினேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது..

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் இந்தப்படம் ரிலீஸாகும் தேதியையும் பர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதியையும் அறிவித்துள்ளார். அதன்படி விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பர்ஸ்ட்லுக் வரும் ஜூன்-5ஆம் தேதியும், படம் வரும் செப்-29ஆம் தேதியும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.