மாணவர்களுக்கு ‘வேலைக்காரன்’ படத்தை இலவசமாக திரையிடும் தயாரிப்பாளர்..!

velaikkaran free 1

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்த வேலைக்காரன் படம் கடந்த மாதம் வெளியானது. மோகன்ராஜாவின் முந்தைய படம் போல மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட இந்தப்படத்தில் ரசாயனம் கலக்கப்பட்ட உணவுப்பொருட்கள் குறித்து சொல்லப்பட்ட கருத்து மக்களை வெகுவாக கவர்ந்தது.. ஊடகங்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்தநிலையில் உணவுப்பிரச்சனையின் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என பல பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களும் சமூக நல ஆர்வலர்களும் தயாரிப்பு நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்தனராம்.

இதனையடுத்து பள்ளி மாணவர்கள் பார்க்கும் விதமாக படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்கிவிட்டு மாணவர்களுக்கு வரும் பிப்-1ஆம் தேதி முதல் பிப்-15ஆம் தேதி வரை இலவசமாக வேலைக்காரன் படத்தை திரையிட்டு காட்ட தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா முடிவுசெய்துள்ளார்.

இந்தப்படத்தை தங்களது மாணவர்களுக்கு திரையிட்டு காட்ட விரும்பும் பள்ளி நிர்வாகம், தங்களை தொடர்புகொண்டால், அவர்களது பள்ளி அருகிலேயே உள்ள தியேட்டர்களில் இலவச காட்சியாக திரையிட ஏற்பாடு செய்து தரப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

விரும்புவர்கள் 7010165044 மற்றும் 9600045747 ஆகிய எண்களையோ அல்லது velaikkaran.schools@24amstudios.com என்கிற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.