கதாபாத்திரங்களின் நியாய தர்மங்களை சொல்லும் ‘வீரையன்’..!

Veeraiyan movie

பொதுவாக கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்புக்குள் தான் நிறைய படங்கள் வருகின்றன. ஒரு சில படங்கள் அந்த வழக்கத்தை உடைத்து வெற்றியும் பெற்றுள்ளன. அந்தவகையில் வீரையன்’ என்கிற படம் கதாபாத்திரங்களின் நியாய, தர்மங்களை சொல்லும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால், சூழ்நிலைகளும், சம்பவங்களுமே கதையை முன்னோக்கி எடுத்து செல்லும். இது புதிய வகை எதார்த்தவாதம் என்ற கோட்பாட்டு வகையைச் சார்ந்தது. 90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப்படம் ஒரு பக்கம் தந்தை – மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் ஆரம்பமாகும்.

கதையின் நாயகனாக இனிகோ பிரபாகர், நாயகியாக ஷைனி, முக்கிய வேடங்களில் ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். படத்தை எஸ்.பரீத் என்பவர் இயக்கியுள்ளார்.

படம் ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க ஆரம்பித்து பார்வையாளர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும். இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் திருநங்கை கதாபாத்திரமும், ”சரசம்மா” என்கிற ஆவி கதாபாத்திரமும் முக்கியமான தவிர்க்க முடியாத கதாபாத்திரங்களாகும். இத்திரைப்படம் நவம்பரில் திரைக்கு வரவிருக்கிறது.