வரலட்சுமிக்கு ‘சக்தி’ வாய்ந்த வில்லன் தயார்

varalaksmi (2)

ஒரு பக்கம் ஸ்டார் படங்களில் கதாநாயகியாக நடித்துக்கொண்டே இன்னொரு பக்கம் ‘ஸ்டார் வேல்யூ’ உள்ள கதைகளிலும் நடித்து வருகிறார் வரலட்சுமி.. அறிமுக இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கத்தில் வரலட்சுமி நடிக்கும் ‘சக்தி’யும் அப்படி ஒரு படம் தான்.

வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் வலுவான வில்லனும் இருக்கிறார். கத்தி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த பாலிவுட் நடிகரான நீல் நிதின் முகேஷ் தான் அவர் என சொல்லப்படுகிறது. இயக்குனர் இதை உறுதி செய்தாலும் நீல் நிதின் முகேஷ் இன்னும் இதுகுறித்து மௌனம் காக்கிறாராம்..