மகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்த கூட்டணியில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி யும் இணைந்துள்ளார். ஆம். இதில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் வரலட்சுமி. தந்தையுடன் இணைந்து நடிப்பது மிகவும் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றும் வரலட்சுமி சரத்குமார் கூறியிருக்கிறார்