வல்லவன் பட உரிமை யாருக்கு..? ; தேனப்பன் விளக்கம்

vallavan issue

2006-ம் வருடம் சிலம்பரசன் முதன்முதலாக இயக்கிய படமாக வெளியானது வல்லவன். சிலம்பரசன் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர் பி.எல்.தேனப்பன் இந்த படத்தை தயாரித்திருந்தார் இந்த படம் வெளியாகி சுமார் 12 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்த படத்தில் இந்தி உரிமை யாருக்கு சொந்தம் என்ற பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

இதுகுறித்து இயக்குனரும் சிலம்பரசனின் தந்தையுமான டி.ராஜேந்தர் இன்று காவல் துறையில் ஒரு புகார் அளித்துள்ளார்.. அதில் இந்த வல்லவன் மற்றும் மன்மதன் என இரண்டு படங்களில் இந்தி பட விற்பனை உரிமை தங்களிடம் தான் உள்ளது எனவும் தயாரிப்பாளர் தேனப்பன் இதை தங்கள் அனுமதியில்லாமல் ஹிந்தியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பி எல் தேனப்பன், “நான் வல்லவன் படத்தை தயாரித்து அதில் சிம்புவை இயக்குனராக அறிமுகப்படுத்தியும் அந்த படத்தில் அவருடைய ஒத்துழையாமை பட்ஜெட் பலமடங்காகி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் இன்றளவும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த நிலையில் வல்லவன் படத்தின் தயாரிப்பாளரான என்னையும் எனது 35 ஆண்டு கால திரையுலக அனுபவத்தையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் என்மேல் அபாண்டமாக பழி சுமத்தும் வகையில் பேசிய டி.ராஜேந்தர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும் என் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேவைப்பட்டால் இது தொடர்பாக காவல் ஆணையரை சந்தித்து புகார் அளிக்கவும் இருக்கிறேன்” என விளக்கமளித்துள்ளார் பி.எல்.தேனப்பன்.