“அரைச்ச மாவையே அரைக்கிறேன்” ; வைபவ் பட இயக்குனர் ஓபன் டாக்..!

vaibav

பேய் படமாக இருந்தாலும், ஹாரர் காமெடி படமாக இருந்தாலும் அல்லது ரொமாண்டிக் காமெடி படமாக இருந்தாலும் அதில் சரியாக செட்டாகி விடுகிறார் நடிகர் வைபவ்.. அந்தவகையில் சாச்சி என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் பெயரிடப்படாத ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கிறார் வைபவ். திரைக்கதை, வசனகர்த்தா விஜியிடம் 6 ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் சாச்சி.

“எனது கதையில் நாயகனுக்கு தேவைப்பட்ட அப்பாவியான முகம் வைபவிடம் இருந்தது. அவர் எவ்வளவு பொருத்தமானவர் என்பது, அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்தாலே இது தெரியும். இது ஒன்றும் வித்தியாசமான திரைப்படம் அல்ல. என் படத்திலும் ஒரு நாயகன், ஒரு நாயகி மற்றும் ஒரு வில்லன். நாயகம் ஒரு நடுத்தர வர்க்கவர்க்கத்தை சார்ந்தவர், எதிர்பாராத சம்பவத்திற்கு பிறகு அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது தான் கதை. இதை கேட்கும் போது அரைச்ச மாவையே அரைக்கின்ற உணர்வு எழலாம். ஆனால், அதை படமாக்கிய விதம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும்” என்கிறார் சாச்சி.