பாய்ஸ் ஹாஸ்டலில் இளம்பெண் ; சமாளிக்க தயாராகும் வைபவ்..!

vaibhav-stills-1

சமீபத்தில் வெளியான சென்னை-28’ படத்தில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வைபவ்.. கவனிக்கத்த வகையில் தான் நடிக்கும் படங்களில் தலைகாட்டும் வைபவ் இன்னும் சொல்லிக்கொள்கிற மாதிரி வெற்றி எதையும் தரவில்லை.. இப்போது வைபவை தேடி மலையாள ரீமேக் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது..

இந்த வருட ஆரம்பத்தில் மலையாளத்தில் வெளியான எ’அடி கப்பியாரே கூட்டமணி’ என்கிற படம் தான் அது. ஒரு பாய்ஸ் ஹாஸ்டலில் ஒரு இளம்பெண் மூன்று நாட்கள், அவளை மற்றவர்களிடம் இருந்து மறைக்க படாதபாடு படும் இளைஞன் என்கிற சுவாரஸ்யமான கற்பனையை நூறு சதவீத காமெடியாக கொடுத்திருந்தார்கள்.. ஆனால் இது அனைத்தையும் விட கிளைமாக்ஸில் வைத்த ‘பேய்’ ட்விஸ்ட் ஒன்று படத்தின் ஹைலைட்டாக அமைந்தது.. வைபவிற்கு இது நிச்சயம் வெற்றி கொடுக்கும் என நம்பலாம்.