‘வந்தா மல’ பட பாடல் மூலம் கவனம் ஈர்த்த இகோர்..!

ஆர்யாவை வைத்து ‘கலாப காதலன்’ படத்தை இயக்கிய இகோர் முற்றிலும் நான்கு புதுமுகங்களை வைத்து ‘வந்தா மல’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி தந்திருக்கிறார். இந்த நான்கு பேரை செலக்ட் பண்ணுவதற்காக கிட்டத்தட்ட 2௦௦௦ பேரை ஆடிசன் பண்ணினாராம் இகோர். படத்தில் கதாநாயகியாக ‘கங்காரு’ பிரியங்கா நடித்திருக்கிறார்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. சாம் டி.ராஜ் என்னும் புதியவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் ‘என்னாண்ட காதல நீ சொல்லும்போது இன்னா நெனச்ச’ என ஒரு கானா பாடலை விஜயலட்சுமி என்பவருடன் இணைந்து பாடியுள்ளார் இகோர். சான்சே இல்லை.. இந்த வருடத்திய ஹிட் பாடல்களில் அதுவும் ஒன்றாய் இடம்பிடிக்கும் என்றே தெரிகிறது.

குறிப்பிடக்கத்தக்க முக்கியமான சிறப்பம்சம், நடிகர் திலகம் சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கிய, பழம்பெரும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம், இந்தப்படத்தில் பேட்டை தாதாவாக நடித்துள்ளார். மலேசியாவை சேர்ந்த இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெயராதா கிருஷ்ணன், இயக்குனர் இகோரிடம் போனிலேயே முழுக்கதையையும் கேட்டு ஒகே செய்தாராம்.

https://www.youtube.com/watch?v=Kkq7f1tMHxA