சீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை..!

vadachennai

தேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘வட சென்னை’ இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் என்றாலே ஒரு பக்கம் கமர்ஷியல் ரசிகர்களை கவருவதுடன் சர்வதேச விழாக்களிலும் கவனம் ஈர்க்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

தற்போது சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரையிடப்பட இருக்கிறது. அடுத்த மாதம் 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழா நடக்க இருக்கிறது. இதில் 3வது நாளில் வடசென்னை திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் வடசென்னை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். இது இவருக்கு 25வது படம் தனுஷ் இன் வுண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளது. லைக்கா நிறுவனம் இந்தப்படத்தை அக்-17ஆம் தேதி முதல் உலகெங்கும் ரிலீஸ் செய்கிறது.