ஏப்ரல் 25ல் ‘வாயை மூடி பேசவும்’ ரிலீஸ்..!

இந்தமாதம் மிக முக்கியமான படங்கள் எல்லாம் வெளியாகின்றன. வெளியாக இருக்கின்றன. அந்தவகையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் வரிசையில் வரும் 11ஆம் தேதி விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’, 18ல் வடிவேலுவின் தெனாலிராமன்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 25ல் ‘காதலில் சொதப்புவது எப்படி’ புகழ் பாலாஜி மோகன் இயக்கியுள்ள அடுத்த படமான ‘வாயை மூடி பேசவும்’ படமும் வெளியாகிறது. தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் கதாநாயகனாக தமிழுக்கு அறிமுகமாகிறார்.. கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கிறார்..