சந்திரசேகருக்கு சர்ப்ரைஸ் ஷாக் தந்த சூப்பர்ஸ்டார்..!

rajini in vagai chandrasekar function

கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பயணம் செய்து வருகிறார் நடிகர் வாகை சந்திரசேகர்.. ஒருகாலத்தில் திரையுலகை ஆட்சி செய்த மும்மூர்த்திகளில் ஒருவரான விஜயகாந்துடன் இணைந்து பல படங்களில் நடித்த சந்திரசேகர், சூப்பர்ஸ்டார் ரஜினியுடனோ அல்லது கமலுடனோ ஏதாவது ஒரு படத்தில் நடித்திருந்தால் கூட அது ஆச்சர்யம் தான்..

தானும் ஓர் அரசியல்வாதி என்பதால் அவ்வப்போது ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்தும் வந்துள்ளார். ஆனாலும் ரஜினியுடன் நெருங்கிய நட்புறவிலேயே இருந்துவந்த சந்திரசேகர், தனது மகள் சிவநந்தினி திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுத்து அழைத்தபோது ரஜினி நேரில் வருவார் என நம்பவே இல்லையாம்.. ஆனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேரில் வந்து சூப்பர்ஸ்டார் மணமக்களை வாழ்த்த, ரொம்பவே நெகிழ்ந்து போய்விட்டாராம் சந்திரசேகர்.