15௦௦ தியேட்டர்களில் ‘உத்தம வில்லன்’ மெகா ரிலீஸ்..!

 

உழைப்பாளர் தினமான மே-1ல் கமலின் ‘உத்தம வில்லன்’ வெளியாவதில் எந்த மாற்றமும் இனி இல்லை. திருப்பதி பிரதர்ஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்து, ரமேஷ் அரவிந்த் இயக்கி, ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை ஈராஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக வெளியிட உள்ளது.

உலகமெங்கிலும் கிட்டத்தட்ட 15௦௦ தியேட்டர்களுக்கு மேல் உத்தம வில்லன் திரையிடப்பட இருக்கிறது. இதில் தமிழகத்தில் 400க்கும் அதிகமான திரையரங்குகளிலும், சென்னையில் மட்டுமே 6௦ தியேட்டர்களுக்கு குறைவில்லாமலும் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.