பொய் வழக்கு போடுபவர்களுக்கு மீண்டும் ஒரு அடி..!

தமிழ் சினிமா மீது வெளியில் இருந்து தொடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி அச்சுறுத்தினாலும், நீதிமன்றம் நியாயத்தின் பக்கமே நிற்பது ஆறுதலான விஷயம். கடந்த மார்ச் மாதம் முழுவதும் ‘கொம்பன்’ பஞ்சாயத்து ஓடியது என்றால், இந்த மாதம் சிக்கியது ‘உத்தமவில்லன்’. இந்தப்படத்தில் வைஷ்ணவர்களை புண்படுத்தும்படியான பாடல் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தடை கோரி வழக்கு தொடர்ந்தார்கள்.

ஆனால் இவர்கள் தொடர்ந்த வழக்கில் எந்தவித முகாந்திரமும் இல்லை என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம். கொம்பன் படத்தை போல அல்லாமல், நல்லவேளையாக ரிலீஸ் தேதிக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததில் இந்தபிரச்சனைக்காக குரல் கொடுத்த அனைவருக்குமே மகிழ்ச்சி தான். திட்டமிட்டபடி மே-1ஆம் தேதி திரைக்கு வருகிறது உத்தம வில்லன்.