உத்தம வில்லனுக்கு ‘U’ சான்றிதழ்..!

 

இந்தமாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ‘உத்தம வில்லன்’ இறுதிக்கட்ட பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வரும் மே-1ல் ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். திருப்பதி பிரதர்ஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்து, ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்தப்படத்தை ஈராஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக வெளியிட உள்ளது.

 

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி மேனன், நாசர், ஊர்வசி என நட்சத்திர பட்டாளத்துடன் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரும் கமலின் இன்னொரு ஆஸ்தான இயக்குனரான கே.விஸ்வநாத்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது