நவ-16ல் உத்தரவு மகாராஜா ரிலீஸ்..!

utharavu maharaja release

நடிகர் உதயா தற்போது நடித்துள்ள படம் ‘உத்தரவு மகாராஜா’. இயக்குனர் ஆஸிப் குரைஷி. இயக்கியுள்ள இந்தப்படம் தயாரிப்பாளர் சங்கத்தின் வழிகாட்டுதலின் படி நவ-16ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த சைக்கோ த்ரில்லர் கதை இது. இப்படத்தில் பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் நாசர், கோவைசரளா, ஸ்ரீமன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பல நட்சத்திரங்களுடன் நீண்ட இடைவெளிக்குப்பின் குட்டி பத்மினி நடித்திருக்கிறார்

அதைவிட மிக முக்கியமாக ‘திருநெல்வேலி’ படத்தில் பிரபுவுடன் இணைந்து நடித்த உதயா கிட்டத்தட்ட 17 வருடம் கழித்து இதில் மீண்டும் பிரபுவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.