அக்-11ல் ‘உப்புக்கருவாடு’ இசைவெளியீடு..!

‘கெளரவம்’ படத்திற்கு பிறகு ஒரு கௌரவமான இடைவெளி விட்டு ராதாமோகன் இயக்கியுள்ள படம் தான் உப்புகருவாடு.. நகைச்சுவை நடிகரான கருணாகரனை சோலோ ஹீரோவாக இவர் அறிமுகப்படுத்துகிறார் என்கிறபோதே படத்தில் நிச்சயம் இன்ட்ரஸ்டிங்கான ஏதோ ஒன்று இருக்கிறது என்கிற ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளார்.

கருணாகரன் ஜோடியாக ‘அட்டகத்தி’ நந்திதா நடித்துள்ள இந்தப்படத்திற்கு புதியவரான ஸ்டீவ் வாட் இசையமைத்திருக்கிறார். தமிழ் திரை உலகில் தரமான படங்களை வாங்கி வெளியிடுவோர் என்ற பெயரை குறுகிய காலத்தில் பெற்று உள்ள Auraa சினிமாஸ் சினிமாஸ் உப்புகருவாடு படத்தை வாங்கி வெளியிடுகிறனர். இவர்கள் இந்தப்படத்தின் இசை வெளியீட்டை நாளை மறுநாள் (அக்-11) நடத்த உள்ள்ளனர்.