டிசம்பரில் ரிலீசாகும் ‘உள்குத்து’..!

ulkuthu release

திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து அட்டகத்தி தினேஷ் – கார்த்திக் ராஜுவும். ‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு தினேஷும் நந்திதாவும் மீண்டும் இணைந்துள்ள படம் தான். ‘உள்குத்து’. ‘பிகே பிலிம் பேக்டரி’ ஜி.விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் கடந்த மே மாதமே ரிலீசாக தயாரானது.. ஆனால் படத்தை இப்போது டிசம்பரில் ரிலீஸ் செய்கிறார்கள்.

“இப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் இயக்குனர் கார்த்திக் ராஜு மிக சிறப்பாக உருவாக்கியுள்ளார். நல்ல கதைகளை தேடி தேர்வு செய்து நடிக்கும் தினேஷ் இப்படத்தில் அசத்தியுள்ளார். வணிக தரப்பிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ‘உள்குத்து’ படத்தை ரிலீஸ் செய்வதற்கு இதுவே சரியான நேரமாக நாங்கள் கருதுகிறோம் என்கிறார் ‘உள்குத்து’ தயாரிப்பாளர் விட்டல் குமார்.