மீன்வெட்டி பிழைப்பவர்களின் வாழ்க்கையை சொல்லவரும் ‘உள்குத்து’..!

இதற்குமுன் பல படங்கள் மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியாகியிருக்கின்றன. ஆனால் மீன் வெட்டுபவர்களின் வாழ்க்கையை முதன்முறையாக சொல்லவரும் படம் தான் ‘உள்குத்து’. அட்டகத்தி தினேஷ், நந்திதா மீண்டும் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தை இயக்குகிறார் கார்த்திக்..

தினேஷ் நடித்த ‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கிய அதே கார்த்திக் தான். படத்தை தயாரிப்பதுகூட அந்தப்படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் தான். இந்தப்படத்தில் பாலசரவணன், ஜான் விஜய், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோருடன் வில்லனாக அறிமுகமாகிறார் ஸ்டான்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.

பண்ணையாரும் பத்மினியும், ஆரஞ்சு மிட்டாய் படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். மீன் வெட்டுபவர்களின் வாழ்வியல் மிகவும் வித்தியாசமான ஒன்று. தனாலேயே அதற்கு பொருத்தமான இடமாக படத்தின் கதைக்களமாக நாகர்கோவிலில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.