உதயநிதியை சைக்கோவாக மாற்றும் மிஷ்கின்..!

psycho

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஜோடியாக நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், வரும் 7-ஆம் தேதியில் இருந்து சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது..