டூப்ளிகேட் தயாரிக்கும் உதயா..!

Udhaya's Duplicate

சமீபத்தில் வெளியான உத்தரவு மகாராஜா படத்தை தொடர்ந்து நடிகர் உதயா தயாரிக்கும் படம் டூப்ளிகேட். ஹாரர் த்ரில்லர் ஆக உருவாகும் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் குமார் என்பவர் இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்

இந்தப்படத்தில் கதாநாயகியாக டப்மாஸ் புகழ் மிருணாளினி ரவி நடிக்கிறார். இவர் தற்போது விஜய்சேதுபதி நடித்துவரும் சூப்பர் டீலக்ஸ், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் சாம்பியன், சிவி.குமார் தயாரிக்கும் ஜாங்கோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் ஒரு பெண் ஒரு கார் ஒரு இரவு ஆகியவற்றிடையே நடக்கும் நிகழ்வுகள் தான் திரைக்கதையாக மாற்றப்பட்டுள்ளது மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் முன்னணி கதாநாயகன் ஒருவர் நடிக்க உள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட நடிகர் உதயா திட்டமிட்டுள்ளார்.