உதயநிதி படத்தில் மகேந்திரனுக்கு ஸ்பெஷல் கேரக்டர்..!

Director-Mahendran

இயக்குனர் மகேந்திரனை ‘தெறி’ படத்தில் வில்லனாக நடிக்கவைத்து நடிகராகவும் மாற்றிவிட்டார் அட்லி.. ஆனால் அதற்பிறகு வாய்ப்பு கிடைக்கிறதே என எல்லா படங்களிலும் நடிக்க மகேந்திரன் விரும்பவில்லை. இதனாலேயே தேடிவந்த பல்வேறு வாய்ப்புகளை தவிர்த்து வந்தாராம் மகேந்திரன்

ஆனால். பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் உதயநிதியை வைத்து இயக்கும் படத்தில் உதயநிதிக்கு தந்தையாக நடிக்கும் கேரக்டருக்காக மகேந்திரனை அணுகியபோது அவரால் அதை தட்டிக்கழிக்க முடியவில்லை.. காரணம் இயக்குனரும் ஹீரோவும் மட்டுமல்ல, படத்தில் அவருக்காக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த கதாப்பாத்திரம் மகேந்திரனை உடனடியாக ஒகே சொல்ல வைத்ததாம். அமெச்சூர் போட்டோகிராபரான உதயநிதியை அடடா என சொல்லவைக்கும் நபராக மாற்றும் கேரக்டர் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

மலையாளத்தில் பிரபலமான நமீதா பிரமோத், மற்றும் ஏற்கனவே நமக்கு தெரிந்த பார்வதி நாயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அத்துடன் இந்தப்படத்துக்கு அவரே வசனம் எழுதுகிறார். கிடாரி’ புகழ் தர்புகா சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு துரித வேகத்தில் தென்காசி அருகே நடந்து வருகிறது..